ஜப்பானின் தீவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
ஜப்பானில் உள்ள ஒரு தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே இடத்தில் கூடியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.
சூழ்ந்த காகங்கள்
ஹோன்சு தீவில் திடீரென மர்மமான முறையில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே சமயத்தில் சூழ்ந்தன. அங்கிருந்த வீடுகள் வாகனங்கள் மீது காகங்கள் அமர்ந்துகொண்டும், பறந்துக்கொண்டும் இருந்தன.
இந்த காகங்கள் எங்கிருந்து வந்தன, ஏன் சூழ்ந்திருந்தன என்பது குறித்து தெரியவில்லை.
Flocks of Crows arrive in areas of Kyoto, Honshu, Japan. (07.02.2023). ? pic.twitter.com/f4VkwP8ll6
— BRAVE SPIRIT?? (@Brave_spirit81) February 8, 2023
வைரலான வீடியோ
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுகுறித்து தெளிவான விளக்கம் எங்கும் தெரிய வரவில்லை.
இதற்கு முன்பு மங்கோலியா பகுதியில் உள்ள பண்ணையில், ஏராளமான செம்மறி ஆடுகள் 10 நாட்கள் வட்டமாக அணிவகுத்து சென்ற வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
The great sheep mystery! Hundreds of sheep walk in a circle for over 10 days in N China's Inner Mongolia. The sheep are healthy and the reason for the weird behavior is still a mystery. pic.twitter.com/8Jg7yOPmGK
— People's Daily, China (@PDChina) November 16, 2022