மருத்துவ கழிவுகளால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம்: WHO எச்சரிக்கை!.
அடுத்தடுத்த மரபணு மாறிய புதியவகை கொரோனா பெருந்தொற்றுகள் உலக நாடுகளை திணறடித்து கொண்டு இருக்கிறது.
இந்த கொரானா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளும் தடுப்பூசிகள், முகக்கவசங்கள் என மருத்துவ உபகரணங்களை தயாரித்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பெருந்தொற்றுயை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகாரணங்களால் உருவாகியுள்ள மருத்துவ கழிவுகள் உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்புகளை உருவாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், டெஸ்ட் கிட்கள் மற்றும் காலியான தடுப்பூசி பாட்டில்கள் ஆகிய மருத்துவக் கழிவு ஒரு இடத்தில் கொட்டப்படுவதால் அந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றன.
இதனால் அப்பகுதி மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு வரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும் இவ்வாறு கொட்டப்படும் அல்லது எரிக்கப்படும் மருத்துவ கழிவுகளால் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுவரை டெஸ்ட் கிட்களால் 2600 டன் கழிவு மற்றும் தடுப்பூசியால் 1,44,000 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.