ஜேர்மனியிலுள்ள நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல்: ஊழியர்கள் வெளியேற்றம்
ஜேர்மனியில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேட்டோ விமான தளத்துக்கு அச்சுறுத்தல்
?We raised the security level at NATO Airbase Geilenkirchen based on intelligence information indicating potential threat. All non-mission essential staff have been sent home as a precautionary measure. The safety of our staff is our top priority. Operations continue as planned.
— NATO AWACS (@NATOAWACS) August 22, 2024
ஜேர்மனியிலுள்ள Geilenkirchen நகரில் அமைக்கப்பட்டுள்ள நேட்டோ விமான தளம் ஒன்றிற்கு பயங்கர அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை மூலம் ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர்த்து மற்றவர்கள் உடனடியாக விமான தளத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
என்ன அச்சுறுத்தல் என்பது குறித்த எந்த தகவலையும் அதிகாரிகள் வெளியிடவில்லை. என்றாலும், கவலைக்குரிய விடயம் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |