நாட்டை விட்டு தப்பி அண்டை நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆப்கானியர்களுக்கு நேர்ந்த கதி! சடலமாக கிடந்த பயங்கரம்
ஆப்கானிஸ்தானிலிந்து தப்பி பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற ஆப்கானியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடிய பின், தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.
தாலிபன் ஆட்சியின் கீழ் வாழ வரும்பாத ஆப்கானியர்கள் ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி அண்டை நாடான பாகிஸ்தானுக்குள் நுழைய முயன்ற ஆப்கானியர்கள் மீது பாகிஸ்தானிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தாலிபன் வட்டாரங்கள் அளித்த தகவலின் படி, வடமேற்கு பாகிஸ்தானின் டோகாம் சோதனைச் சாவடி அருகே சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற ஆப்கானியர்கள் மீது பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தின.
இதில், 3 ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட ஆப்கானியர்களின் உடல்கள் இன்னும் சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ளன என தாலிபன் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.