கிராமத்தினரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட மூவர்: சிறுவனுக்கு நடந்த கொடூரத்தால் ஆவேசம்
ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த கடத்தல்காரர்கள் மூவரையும் சிறைபிடித்து, பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
வனப்பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன், சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை விசாரித்துள்ளனர்.
குவாத்தமாலாவில் சிறுவனை கொலை செய்த மூவரை கிராம மக்கள் திரண்டு காவல் நிலையத்தில் இருந்து இழுத்து சென்று உயிருடன் கொளுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
@dailymail
குவாத்தமாலாவின் மேற்கு நகரமான கொலோடோனாங்கோவில் குறித்த கோர சம்பவம் திங்களன்று அரங்கேறியுள்ளது. இதில் 24 வயதுடைய இருவரும் 38 வயதுடைய ஒருவரும் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
குவாத்தமாலா தேசிய காவல்துறை வெளியிட்ட தகவலில், குறித்த மூவரும் ஆகஸ்ட் 12ம் திகதி ஃப்ரெடி மெண்டஸ் என்ற 11 வயது சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளதுடன், விடுவிப்பதற்காக $19,500 மீட்கும் தொகையைக் கோரியுள்ளனர்.
சிறுவனின் தந்தை தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார், மேலும் ஒரு புதிய குடியிருப்பைக் கட்டுவதற்காக அடிக்கடி பணத்தை வீட்டிற்கு அனுப்பி வந்துள்ளார். இந்த தகவலை அறிந்த அந்த மூவர் குழு சிறுவனை குறிவைத்ததாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதனிடையே, அந்த மூவரின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் கோரிக்கை விடுத்த பணத்தை சிறுவனின் குடும்பம் அளித்துள்ளது. ஆனால் சிறுவன் வீடு திரும்பவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தீவிரமாக களமிறங்கி அந்த கடத்தல்காரர்கள் மூவரையும் சிறைபிடித்துள்ளதுடன், பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் அத்துமீறிய குழு ஒன்று, அந்த கடத்தல்காரர்களில் ஒருவரை இழுத்து சென்று வனப்பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன், சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்பதை விசாரித்துள்ளனர்.
இதில், சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதையும், உடலை புதைத்ததையும் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அந்த குழு, அந்த நபரை உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளது.
மட்டுமின்றி, குறித்த தகவல் கிராம மக்களுக்கும் தெரியவர, ஆத்திரத்தில் எஞ்சிய இருவரையும் காவல் நிலையத்தில் இருந்து இழுத்து சென்று, வனப்பகுதியில் வைத்து உயிருடன் கொளுத்தியுள்ளனர்.
மட்டுமின்றி, அந்த மூவரில் ஒருவரது குடியிருப்பையும் கிராம மக்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதனிடையே, சிறுவன் ஃப்ரெடி மெண்டஸ் சடலமானது புதன்கிழமை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.