ரஷ்யாவில் பரபரப்பு! பயங்கர ஆயுதங்களுடன் வங்கியில் மர்ம நபர் செய்த செயல்! தூப்பாக்கிகளுடன் குவிந்த படை
ரஷ்யாவில் உள்ள பெரிய வங்கிகளில் ஒன்றான Sberbank-ல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர், 2 ஊழியர்களை பணயக்கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைபீரிய நகரமான தியுமெனில் உள்ள Sberbank வங்கி கிளையிலே இச்சம்பவம் நடந்துள்ளது.
முதற்கட்ட தகவலின் படி, தியுமெனில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்கி வரும் Sberbank கொள்ளையன் கட்டுப்பாட்டில் உள்ளது.
2 வங்கி ஊழியகர்களை கொள்ளையன் சிறைபிடித்து வைத்துள்ளான் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை அதிகாரிகள் கொள்ளையினிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
#Russie , prise d'otages dans la succursale de la #Sberbank à Tioumen https://t.co/xhad36GUTD pic.twitter.com/xgfVHzQczb
— RUSSIE INFO ?? (@_RUSSIE_) July 7, 2021
பேச்சுவார்த்தையின் போது தான் வைத்திருக்கும் பையில் பயங்கரமான சாதனம் இருப்பதாக கொள்ளையன் கூறியதாகவும், தனக்கு பணம் வேண்டும் எனவும் அவன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Russia: Hostage taking situation in Sberbank branch in Tyumen. 2 hostages, suspect is reportedly armed with IED and demanding $200000 https://t.co/lpvjDHpQ97 pic.twitter.com/GGbHPk1Bsd
— Liveuamap (@Liveuamap) July 7, 2021
இச்சம்பவத்தை தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த 50 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.
சம்பவியடத்திற்கு விரைந்த ஆயுதமேந்திய படையினர் கட்டிடத்தை சுற்றி குவிந்துள்ளனர்.