தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும்.. சட்டென பறந்தோடும்
வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டை வலி, கரகரப்பை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம்.
மழைக் காலங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனை தொண்டை வலி, தொண்டை கரகரப்பு. இந்த பருவத்தில் பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் ஏற்படும் என்பதால் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
என்ன செய்ய வேண்டும்?
- துளசி மற்றும் ஏலக்காயை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.
- கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகளை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும்.
- ஆடாதொடா இலை, நொச்சி இலை ஆகியவற்றுடன் சிறிது மிளகு தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
- சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை சிறிதளவு எடுத்துக் கொண்டு நன்கு இடித்து, தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்து, பின்னர் தேநீர் போல் இனிப்பு சேர்த்து அல்லது சேர்க்காமல் கஷாயம் போல் குடிக்கலாம்.
- தொண்டை புண்ணை சரி செய்ய ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் காய்ச்சி குடிக்கும்போது, தொண்டை வலிக்கு இதமாகவும் சரி செய்யவும் உதவும்.
இஞ்சி தேநீர்
வழக்கமான தேநீர் குடிப்பதை விட அதில் இஞ்சி சேர்த்து பருகலாம். அதனுடன் சிறிதளவு மிளகுத்தூளை சேர்த்து பருகும்போது தொண்டை வலி சரியாகும்.
துளசி சாறு
துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக குடிக்கும்போது சளியை குறைப்பதுடன், தொண்டை வலிக்கும் ஆறுதல் அளிக்கும்.
எலுமிச்சை
எலுமிச்சையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், தொண்டை புண் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாகும். எனவே சூடான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து பருகலாம்.
Getty Images/iStockphoto
மிளகு மற்றும் புதினா தேநீர்
பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவும் என்பதால் மிளகு மற்றும் புதினாவை கொண்டு தொண்டை வலி மற்றும் சளியை குணப்படுத்தலாம்.
இவற்றை தவிர தொண்டை வலியைக் குணப்படுத்த உப்பு நீரில் வாய் கொப்பளிக்கலாம்.