இந்திய பிரதமரின் கார் மீது செருப்பு வீச்சு.., வெற்றிக்கு பிறகு நடந்த பரபரப்பு சம்பவம்
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சொந்த தொகுதிக்கு வந்த நிலையில் அவரது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு நரேந்திர மோடி வெற்றி பெற்றார். கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களை போலவே நரேந்திர மோடி வெற்றி பெற்றார். இதையடுத்து இந்திய பிரதமராக 3 -வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.
கார் மீது செருப்பு வீச்சு
இந்நிலையில், வாரணாசி சென்ற பிரதமர் மோடி 'பிஎம் கிசான் சமேளன்' திட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் 17 வது தவணையாக ரூ.20000 கோடி ரூபாயை விடுவித்தார்.
பின்னர், வாரணாசியில் காரில் ஊர்வலமாக சென்றார். அப்போது காரின் முன்புறம் இருந்த பிரதமர் மோடியை இருபக்கமும் நின்று பாஜகவினர் வரவேற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் கார் மீது திடீரென செருப்பு வீசப்பட்டது. அதாவது கூட்டத்தில் இருந்து செருப்பு ஒன்று பறந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாவலர் அந்த செருப்பை காரில் இருந்து எடுத்து அப்புறப்படுத்தினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |