கழிவறைக்கு சென்ற நபரை அடித்து இழுத்து சென்ற புலி: ரஷ்யாவில் ஒரு கோர சம்பவம்
ரஷ்யாவில் கழிவறைக்குச் சென்ற ஒருவரை புலி ஒன்று அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Mikhail Shabaldin (41) என்பவர், மரம் அறுக்கும் வேலைக்காக ரஷ்ய கிராமம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார். இரவில் கழிவறைக்குச் சென்ற அவரைக் காணாமல் தேடிய சக மரம் அறுக்கும் பணியாளர்கள், கழிவறைக்குப் பக்கத்தில் டாய்லட் பேப்பர் துண்டுகளும் Mikhailஇன் இரத்தம் தோய்ந்த உடைகளும் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.
பிறகு அங்கே புலியின் கால் தடங்கள் தெரிவதைக் கவனித்த பிறகுதான், புலி ஒன்று Mikhailஐ அடித்து இழுத்துச் சென்றிருக்கவேண்டும் என்பது அவர்களுக்கு புரிந்துள்ளது. Mikhailஇன் உடைகள் ஆங்காங்கு கிடப்பதை வெளியாகியுள்ள படங்களில் காண முடிகிறது.
ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவில் காணப்படும், உலகிலேயே பெரிய புலி இனமான Majestic amur tiger என்ற வகையைச் சேர்ந்த புலிகள், விலங்குகளையும் மனிதர்களையும் வேட்டையாடக்கூடியவையாகும்.
Mikhail இரவு நேரத்தில் கழிவறைக்கு செல்வதற்காக வெளியே சென்றதால், அவரை புலி அடித்து இழுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. அவரைத் தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது என்றாலும், அவரை உயிருடன் கண்டுபிடிப்பது கடினம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.
பசியுடனிருந்த அல்லது காயமடைந்த ஒரு புலி Mikhailஐ இழுத்துச் சென்றிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அதிகாரிகள் இந்த கோர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.