சாலை போராட்டத்தில் ஈடுபட்ட புலி: முடங்கிய போக்குவரத்து: வைரல் வீடியோ
சாலையின் குறுக்கே படுத்துக் கொண்டு போக்குவரத்தை முடக்கிய புலியின் வீடியோ வைரலாகி வருகிறது.
சாலையின் குறுக்கே படுத்துக் கொண்ட புலி
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் தடோபா புலிகள் காப்பகத்திற்கு அருகே அமைந்துள்ள சாலை ஒன்றில் புலி படுத்துக் கொண்டு போக்குவரத்தை முடக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Watch | A video from Maharashtra's Chandrapur district has gone viral on social media, capturing a rare yet risky moment on the Chandrapur-Moharli road near Tadoba. In the footage, a tiger cub, believed to be the offspring of tigress Madhu, is seen sitting calmly in the middle… pic.twitter.com/gsU7D40I5K
— NDTV (@ndtv) November 28, 2025
மது என்று பெயர் கொண்ட பெண் புலி ஒன்றின் குட்டி என கருதப்படும் அந்த பிரம்மாண்ட புலி சாலையின் நடுவில் அமைந்து இருப்பதும், பின்னர் சிறிது நேரம் அசைவின்றி கிடப்பதும் வெளியான வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இந்த அரிய தருணத்தை உள்ளூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஆலம் என்ற நபர் தன்னுடைய கேமராவில் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில், சாலையில் இருந்து புலி விலகி செல்வதற்காக உள்ளூர் கிராம மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களில் காத்து இருப்பதை பார்க்க முடிகிறது.

உள்ளூர்வாசிகள் தெரிவித்த தகவலில், இந்த சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் வனவிலங்குகளை காண்பது சாதாரணமாக மாறி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
விலங்குகள் நடமாட்டத்தை தொடர்ந்து, அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை அதிகாரிகள் தொடர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |