சீனாவில் ரூ.600க்கு விற்பனை செய்யப்படும் புலியின் சிறுநீர்: உயிரியல் பூங்காவின் செயலுக்கு கண்டனம்
சீனாவில் உயிரியல் பூங்காவில் புலி ஒன்றின் சிறுநீர் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலி சிறுநீர் விற்பனை
சீனாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்று, புலி சிறுநீரை பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பைஃபெஞ்சியா வனவிலங்கு உயிரியல் பூங்கா, முடக்கு வாதம், சுளுக்கு மற்றும் தசை வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்க புலி சிறுநீரை விற்பனை செய்வதாக கூறுகிறது.
இந்த வினோதமான செயல்பாடு, சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உயிரியல் பூங்காவிற்கு சென்ற பார்வையாளர் ஒருவர், அங்கு விற்பனை செய்யப்படும் சிறுநீர் தயாரிப்புகளின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தார்.
அதன்படி, 250 கிராம் அளவுள்ள சைபீரியன் புலியின் சிறுநீர் பாட்டில்கள் 50 யுவானுக்கு (சுமார் ரூ.596) விற்பனை செய்யப்படுகின்றன.
பாட்டிலின் லேபிளில் அச்சடிக்கப்பட்டுள்ள அறிவுரை
புலி சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து, இஞ்சித் துண்டுகளுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுமாறு பாட்டிலின் லேபிளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சிறுநீரை வாய் வழியாக உட்கொள்ளலாம் என்றும், ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உயிரியல் பூங்கா தெரிவித்துள்ளது.
மறுத்த நிபுணர்கள் மறுப்பு
மருத்துவ வல்லுநர்கள், புலியின் சிறுநீரில் குணப்படுத்தும் தன்மை உள்ளதாக உயிரியல் பூங்கா கூறுவதை கடுமையாக மறுத்துள்ளனர்.
ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், பாரம்பரிய சீன மருத்துவத்தில் புலியின் சிறுநீர் மருந்தாக அங்கீகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |