சுத்தத்திற்கு பேர் போன துபாய்.. வெள்ளை சாக்ஸில் சாட்சியாக காட்டும் பெண்: வைரலாகும் வீடியோ
துபாய் நாட்டின் சாலைகள் எவ்வளவு சுத்தமானவை, என்பதை அனைவரும் காட்டும் விதமாக டிக்டாக் பிரபலம் ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
சுத்தமான துபாய் சாலைகள்
துபாய் நாட்டின் சாலைகள் பொதுவாக சுத்தமானவை என்றும், சுகாதார பராமரிப்பில் துபாய் எப்போதும் முன்னிலை வகிப்பது காலம் தொட்டு பேசப்பட்டு வருகிறது.
@Dubai Municipality
உதாரணமாக வெற்றி கொடிகட்டு படத்தில் கூட வடிவேலு ‘துபாய் ரோடு கண்ணாடி மாதிரி இருக்கும்டா.. அதுல சோறு போட்டு குலைச்சு அடிக்கலாம்’ என நகைச்சுவையாக கூறியிருப்பார்.
@Dubai Municipality
இந்நிலையில் அதனை உண்மையாக்கும் வகையில் டிக்டாக் பிரபலம் ஒருவர் செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வைரலாகும் வீடியோ
டிக்டாக் பிரபலமான எலோனா என்ற பெண், கால்களில் ஷீ அணியாமல் வெறும் வெள்ளை நிற சாக்ஸ்களை அணிந்து கொண்டு, துபாய் சாலையில் வலம் வந்துள்ளார்.
التيكتوكر ايلونا كرافر مقيمة في #دبي قررت ان تشتري زوج ابيض من الجوارب لكي تختبر لكم نظافة مدينة #دبي والتي حازت على جائزة المدينة الانظف في العالم .
— محمد الكواري (@kuwarimud) May 11, 2023
والنتيجة مذهلة ?? ✨ pic.twitter.com/nujuKpo76Q
பின்னர் சாலைகளை சுற்றி நடந்தவுடன் தனது கால்களை தூக்கி காட்டி வெள்ளை நிற சாக்ஸை காட்டுகிறார். அவரது சாக்ஸில் துசியோ, அழுக்கோ ஒன்றுமே இல்லை என வீடியோ காட்டுகிறது.
@Clint Egbert
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லட்சகணக்கானோரால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. துபாயின் சுகாதார மேலாண்மையை பார்த்து வியந்து, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.