23 பந்தில் அரைசதம்! இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய டிம் டேவிட்..புதிய சாதனை
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலியாவின் டிம் டேவிட் அதிரடி அரைசதம் விளாசினார்.
டிம் டேவிட் வாணவேடிக்கை
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹோபர்ட்டில் நடந்து வருகிறது.
Jasprit Bumrah stunners are back on the menu 😮💨 #AUSvIND pic.twitter.com/EkbdbPZiMH
— cricket.com.au (@cricketcomau) November 1, 2025
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
ட்ராவிஸ் ஹெட் (Travis Head) 6 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இங்கிலிஸ் 1 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த டிம் டேவிட் (Tim David) வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர், பவுண்டரிகள் என விரட்டிய டேவிட் 23 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
இதன்மூலம் அவுஸ்திரேலியாவுக்காக அதிவேகமாக 1000 ஓட்டங்கள் எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) 604 பந்துளில் 1000 ஓட்டங்களை எட்டி முதலிடத்தில் இருந்தார். ஆனால், டிம் டேவிட் 569 பந்துகளிலேயே அதனை கடந்துவிட்டார். 
மேலும், இந்திய அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது (கிரீன் 19 பந்துகளில்) அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
டி20யில் அதிவேகமாக 1000 ஓட்டங்கள் எடுத்த அவுஸ்திரேலிய வீரர்கள்
- டிம் டேவிட் 569 ஓட்டங்கள்
- க்ளென் மேக்ஸ்வெல் 604 ஓட்டங்கள்
- டிராவிஸ் ஹெட் 640 ஓட்டங்கள்
- ஷேன் வாட்சன் 671 ஓட்டங்கள்
- ஆரோன் ஃபின்ச் 671 ஓட்டங்கள்

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |