பூமியை விட சந்திரனில் வேகமாக நகரும் நேரம்., கண்டறிந்த நாசா
பூமியை விட சந்திரனில் நேரம் வேகமாக நகர்வதாக நாசா (NASA) கண்டறிந்துள்ளது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வக (Jet Propulsion Laboratory) ஆராய்ச்சியாளர்கள் சந்திரனில் உள்ள நேரத்தை ஆய்வு செய்து.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள நேர வித்தியாசத்தையும், இரு பூமி, சந்திரன் இரண்டுக்கும் சூரிய மண்டலத்தின் பேரிசென்டருக்கும் (barycenter) இடையே உள்ள நேர வேறுபாட்டை ஆராய்ச்சி குழு கணக்கிட்டது.
இந்த ஆய்வின் முடிவில், பூமியுடன் ஒப்பிடும்போது சந்திரனின் நேரம் ஒரு நாளைக்கு 0.0000575 வினாடிகள் (57.50 microseconds/day) வேகமாக செல்கிறது என்று முடிவு செய்துள்ளனர்.
சந்திரனில் குறைந்த ஈர்ப்பு விசையே இதற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
இது மிகச் சிறிய வித்தியாசமாகத் தோன்றினாலும், விண்வெளிப் பரிசோதனைகள் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகள் தொடர்பாகவும் இந்த நுட்பமான வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
NASA, Moon, Earth Time, Moon Time, Time moves faster on Moon than on Earth