இந்திய தொழிலதிபர் வாங்கிய ரூ.500 கோடி மதிப்புள்ள தனியார் சொகுசு விமானம்., அம்சங்கள் என்ன?
லுலு குழுமத்தின் (LuluGroup) தலைவர் எம்.ஏ. யூசஃப் அலி (M. A. Yusuff Ali) புதிதாக ரூ.500 கோடி மதிப்பிலான சொகுசு தனியார் ஜெட் விமானத்தை வாங்கியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த Gulfstream Aerospace நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட ஆடம்பரமான தனியார் ஜெட் விமானமான Gulfstream G600-ஐ அவர் வாங்கியுள்ளார்.
T7-YMA என பதிவுசெய்யப்பட்ட இந்த விமானம் டிசம்பர் 2023-இல் தயாரிக்கப்பட்டது மற்றும் பிராட் & விட்னி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.
இது 6,600 நாட்டிகல் மைல் range கொண்ட இந்த ஜெட் விமானம் அதிகபட்சமாக மணிக்கு 982 கிமீ வேகத்தை எட்டக்கூடியது.
Gulfstream G600 ஆனது உலகளவில் அதிவேகமான நீண்ட தூர தனியார் ஜெட் விமானமாக அறியப்படுகிறது. அதில் 19 பயணிகளுக்கு வசதியாக இடமளிக்க முடியும்.
2014-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஜெட் விமானம் முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் அதன் உரிமையாளருக்கு வழங்கப்பட்டது, அதன் பின்னர், 100 க்கும் மேற்பட்ட யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.
G600 சமீபத்தில் ஜார்ஜியாவின் சவன்னாவிலிருந்து ஜெனீவாவுக்கு வெறும் 7.21 மணி நேரத்தில் பயணத்தை முடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிவேக விமானத்தில் நியூயார்க்-துபாய், லண்டன்-பெய்ஜிங், லாஸ் ஏஞ்சல்ஸ்-ஷாங்காய் மற்றும் பிற நகரங்களுக்கு இடையில் இடைவிடாமல் பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
விமானம் புறப்படுவதற்கு 5,700 அடி ஓடுபாதையும், தரையிறங்குவதற்கு 3,100 அடியும் தேவை. அதிகபட்ச புறப்படும் எடை 94,600 பவுண்டுகள் மற்றும் அதிகபட்ச தரையிறங்கும் எடை 76,800 பவுண்டுகள்.
இந்த விமானத்தின் வணிக மற்றும் தனியார் ஜெட் கட்டமைப்புகள் இரண்டிலும் சவுண்ட் புரூஃப் கேபின்களுடன் பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
மேம்படுத்தப்பட்ட flight vision system, குறைந்த பார்வையில் பாதுகாப்பான தரையிறக்கங்களை உறுதிசெய்கிறது.
[2QXVLB ]
இந்த விமானம் 14 Gulfstream சிக்னேச்சர் ஓவல் வடிவ ஜன்னல்களைக் கொண்டுள்ளது மற்றும் 96.1 அடி நீளம், 25.3 அடி உயரம் கொண்டது. இறக்கைகள் 94.2 அடி. உட்புற பரிமாணங்கள் 51.2 அடி நீளம், 7.6 அடி அகலம் மற்றும் 6.2 அடி உயரம்.
அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் கொண்ட விமானத்தின் மிகப்பெரிய அம்சம் அதன் வேகம். முந்தைய தலைமுறை விமானங்களை விட 12 சதவீதம் சிறந்த எரிபொருள் திறன் கொண்டது. இருக்கைகளை தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இதில் ஒரே நேரத்தில் 19 பேர் வரை சொகுசாக பயணிக்கலாம்.
லுலு குழுமம் வாங்கிய புதிய விமானத்தின் விலை சுமார் 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
M A Yusuff Ali, Gulfstream G600, luxurious private jet, Gulfstream Aerospace