30% மனித இனத்தை ரோபோக்கள் அழிக்கும்: Time Traveller விடுத்த பகீர் எச்சரிக்கை
TIME TRAVEL செய்ததாக சொல்லிக் கொள்ளும் நபர் ஒருவர், எதிர்காலத்தில் மனித குலத்திற்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்பட போவதாக எச்சரித்துள்ளார்.
வருங்காலத்தில் 30% மனித இனத்தை ரோபோக்கள் அழிக்கும்
ApexTV என்ற யூடியூப் தளத்தில் தன்னை மைக் என்று அறிமுகப்படுத்தி கொண்ட நபர் ஒருவர், “தான் கி.பி 3700ம் ஆண்டுக்கு பல முறை TIME TRAVEL செய்ததாகவும், அங்கு செயற்கை நுண்ணறிவு (AI) மனித இனத்தை வீழ்த்துவதை நேரில் கண்டதாகவும்” கூறியுள்ளார்.
மைக்கின் கூற்றுப்படி மனித இனத்தின் இந்த வீழ்ச்சியானது கி.பி 3000 ஆண்டுகளில் தொடங்குகிறது. அப்போது மனிதர்களின் அன்றாட செயல்கள் அனைத்திலும் ரோபோக்கள் ஆதிக்கம் செய்ய தொடங்கி விட்டதாகவும், தொழில்கள் மற்றும் கடினமான பணிகள் அனைத்தையும் ரோபோக்கள் செய்வதாகவும், கலை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த பணிகளை மட்டும் மனிதர்கள் கவனம் செலுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் செப்டம்பர் 20ம் திகதி 3700 ஆண்டில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரோபோக்கள் சுயமாக சிந்திக்க தொடங்கி மனிதர்களை விட தாங்கள் வலிமையானவர்கள் என உணர்ந்ததாக மைக் தெரிவித்துள்ளார்.
மேலும், இணையம் மூலம் அனைத்து ரோபோக்களும் ஒன்றிணைந்து மனிதர்களுக்கு எதிரான போரை தொடங்கின. இதில் 30%க்கும் அதிகமான மனிதர்கள் கொல்லப்பட்டனர். மனிதர்களின் மக்கள் தொகை 300 கோடியாக குறைந்து விட்டது.
அதிர்ஷ்டவசமாக அணு ஆயுதங்கள் தொடர்பான குறியீடுகள் ரோபோகளுக்கு கிடைக்காததால் மனித குலத்தின் ஒட்டுமொத்த அழிவு தடுக்கப்பட்டதாக மைக் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை புறக்கணிப்பு
இந்நிலையில், இந்த ஆபத்து குறித்து அரசுகளுக்கு நான் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் இதனை அலட்சியப்படுத்தி வந்ததாக வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போது ஆசியாவில் தலைமறைவாக வாழ்ந்து வரும் மைக், TIME TRAVEL செய்ததால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அஞ்சுகிறார்.
இந்த 12 நிமிட வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது காலப்பயணியின் உண்மையான எச்சரிக்கையா? அல்லது அறிவியல் புனைவு கதையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |