மே மாதத்தில் நிகழவிருக்கும் பேரழிவு: டைம் ட்ராவலர் கூறும் திகில் செய்தி
வழக்கமாக தங்களை டைம் ட்ராவலர்கள் என்று அழைத்துக்கொள்பவர்கள், ஏலியன்கள் வரப்போகிறது, 15 ஆண்டுகளில் உலகம் அழிந்துவிடும் என்றெல்லாம் பொதுவாக கூறுவதுண்டு.
ஆனால், அடுத்த மாதம் ஒரு பேரழிவு நடக்கப்போவதாக எச்சரித்துள்ளார் ஒரு டைம் ட்ராவலர்.
ஆயிரக்கணக்கானோர் தங்கள் அன்பிற்குரியவர்களை இழப்பார்கள்
Eno Alaric என்னும் அந்த நபர், தான் 2671ஆம் ஆண்டிலிருந்து வந்த டைம் ட்ராவலர் என்றும், தான் போலி டைம் ட்ராவலர் என மக்கள் எண்ணிவிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மே மாதம் 15ஆம் திகதி, அமெரிக்காவின் மேற்குக் கரை பகுதியை, குறிப்பாக, சான் பிரான்சிஸ்கோவை, 750 அடி உயர சுனாமி ஒன்று தாக்கும் என்று கூறியுள்ளார் Eno Alaric.
சுனாமியின் விளைவாக, பல நூறு பில்லியன் அளவுக்கு சேதம் ஏற்படும் என்றும், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் அன்பிற்குரியவர்களுக்கு விடைகொடுக்கவேண்டியிருக்கும் என்றும் கூறி திகிலை ஏற்படுத்தியுள்ளார் Eno Alaric.
மக்கள் கருத்து
Eno Alaric கூறியுள்ள விடயங்களை தாங்கள் நம்புவதாக சிலர் கூற, வேறு சிலரோ, காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில்சொல்லும் என்கிறார்கள்.
வேறொருவரோ, ’ஏம்பா, அப்போ நல்லது எதுவுமே நடக்காதா?’ என்கிறார்!