ஆந்திராவில் ரயிலில் திடீர் தீ விபத்து - தெறித்து ஓடிய மக்கள்
ஆந்திராவில் ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்து ஓடிய மக்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவில் ரயிலில் திடீர் தீ விபத்து
நேற்று இரவு ஆந்திர மாநிலம், மசூலிப்பட்டினம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் திருப்பதி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது பிரகாசம் மாவட்டம், டங்கடூர் அருகே வந்துக் கொண்டிருந்தபோது திடீரென ரயிலில் தீப்பிடித்தது.
இந்த தீ மளமளவென பற்றி எரிந்து புகை கிளம்பியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஓடிச் சென்று அபாய சங்கிலியை இழுத்து ரயிலை உடனடியாக நிறுத்தினார்கள். பதறிக்கொண்டு மக்கள் ரயிலை விட்டு இறங்கி தப்பித்தனர்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து ஓடி வந்த ரயில்வே அதிகாரிகள் தீயை சீக்கிரமாக அணைத்தனர்.
அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக தெரிவித்தார்கள். அனைத்து பராமரிப்பு செய்த பிறகு மீண்டும் அந்த ரயில் புறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா ரயில் கோர விபத்து சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
~Machilipatnam-Tirupati Express train caught fire near Tangutur station in Prakasham~ https://t.co/bZTwOyQyGn
— Snooper-Scope (@Snooper_Scope) June 5, 2023
Machilipatnam-Tirupati Express train caught fire near Tangutur station in Prakasham
Machilipatnam-Tirupati Express met with a major accident at Tangutur in Prak... pic.twitter.com/zXjh3GpHUx