திருப்பதி கோயிலில் ரூ.3.45 கோடி வசூல்; அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
பொதுவாகவே, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்கதர்கள் அதிகமாக வருகை தரும் நிலையில் தற்போது வார இறுதி என்ற காரணத்தினால் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக 15 மணிநேரங்கள் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோவில் கண்காணிப்பு அதிகாரிகளும், காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கோவில் கண்காணிப்பு அதிகாரிகளும், காவல்துறையினரும் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினத்தில் 84,430 பேர் தரிசனத்திலும், 38,662 பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தியுள்ளார்.
இதில் ரூ.3.45 கோடி உண்டியலில் காணிக்கையும் வசூலானதாக கோவில் நிர்வாக தெரிவித்துள்ளது.
இதேபோல் லட்டு வழங்கப்படும் இடத்திலும் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |