ஒரே நாளில் ரூ.2.98 கோடி வசூல்.... 30 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தததையடுத்து, ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் வருகை தந்துக் கொண்டு இருப்பதாகவும். நீண்ட நேரம் வரிசையில் இருந்து தரிசனம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி இருகின்றது.
நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்கள்
தற்போது பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை காலம் என்பதால் அனைத்து பக்தர்களும் பெருமானை தரிசிக்க கோவிலுக்கு கூட்டம் கூட்டம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
V.I.P கள் பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த சாதாரண பக்தர்கள் 30 மணி நேரம் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தள்ளனர்.
இந்நிலையில் ஒரு நாளில் மட்டும் திருப்பதி கோயிலுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருகின்றது. 54, 620 பேர் தரிசனம் செய்து, 24,234 பக்தர்கள் முடி காணிக்கையும் செலுத்தியுள்ளனர்.
மேலும் ரூ.2.98 கோடி உண்டியலில் வசூல் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |