முதல் முறையாக TNPLயில் மகுடம் சூடிய திருப்பூர் தமிழன்ஸ் அணி! மரண அடி வாங்கிய அஸ்வின் படை
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 இறுதிப்போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்று மகுடம் சூடியது.
துஷார், அமித் சரவெடி ஆட்டம்
TNPL இறுதிப்போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சாய் கிஷோர் தலைமையிலான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி , துஷார் ரஹேஜா மற்றும் அமித் சாத்விக் ஆகியோரின் அதிரடியில் 220 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் விளாசிய அமித் சாத்விக் (Amit Sathvik) 34 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாசினார். துஷார் ரஹேஜா (Tushar Raheja) 46 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்தார்.
வரலாற்றில் முதல் முறை
பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி சிலம்பரசன், மோகன் பிரசாத் மற்றும் இசக்கிமுத்து ஆகியோரின் மிரட்டல் பந்துவீச்சை விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்தது.
இதனால் அந்த அணி 14.4 ஓவரில் 102 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் திருப்பூர் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
மேலும், TNPL வரலாற்றில் முதல் முறையை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |