111 வருடங்கள் பழமையான டைட்டானிக் கப்பலின் உணவுப் பட்டியல்; வைரலாகும் புகைப்படங்கள்!
உலகிலேயே முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட சொகுசு கப்பலான 'டைட்டானிக்' 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியன்று அதிகாலை 2.19 மணியளவில் எதிர்பாராத விதமாகப் பனிப்பாறையில் மோதி நீரில் மூழ்கியது.
அந்த கப்பில் பயணிகள் உண்ட உணவுகளின் உணவுப் பட்டியல் வெளிவந்து வைரலாகி வருகின்றது.
உணவுப் பட்டியல்
டைட்டானிக் கப்பல் மூழ்கி ஏப்ரல் 15ஆம் திகதியுடன் 111 வருடங்கள் ஆகிவிட்டது.
அதையொட்டி டேஸ்ட் அட்லஸ் என்ற பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கம் கப்பலின் பல்வேறு வகுப்புகளில் வழங்கப்பட்ட உணவுகளின் பட்டியலைப் புகைப்படங்களாகப் பகிர்ந்துள்ளது.
அதில், கறிக் கோழி முதல் வேகவைத்த மீன் வரை, ஸ்பிரிங் லாம்ப் முதல் ஆட்டிறைச்சி வரை, மற்றும் வறுத்த வான்கோழி முதல் பிட்டு வரை இருந்துள்ளது.
மேலும், இனிப்பாக பிலம் புட்டை வழங்கியுள்ளனர்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு வரை உணவுகள் வித்தியாசமாகப் பணத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.
அதில் காணப்பட்ட உணவுகள்
பிரில், சோளமாக்கப்பட்ட மாட்டிறைச்சி, காய்கறிகள், பாலாடை, வறுக்கப்பட்ட மட்டன் சாப்ஸ், கஸ்டர்ட் புட்டிங், பானை இறால், நோர்வே நெத்திலி மற்றும் பல்வேறு வகையான சீஸ் ஆகியவை பரிமாறப்பட்டன.
மூன்றாம் வகுப்பில் காலை மற்றும் இரவு உணவிற்குக் குறைந்த அளவு உணவுகள் இருந்துள்ளன.
ஓட்ஸ் மற்றும் பால், புகைபிடித்த ஹெர்ரிங்ஸ், ஜாக்கெட் உருளைக்கிழங்கு, ஹாம் மற்றும் முட்டை, புதிய ரொட்டி மற்றும் வெண்ணெய், மர்மலாட் மற்றும் ஸ்வீடிஷ் ரொட்டி ஆகியவை மட்டுமே தேர்வுக்காக இருந்துள்ளது.
பயணிகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் டைட்டானிக் அனைவருக்கும் ஆடம்பரமான உணவு அனுபவத்தையே வழங்கியுள்ளது.
இவ்வளவு ஆடம்பரமாகச் சென்ற கப்பல் ஒரு மணிநேரத்திற்குள் மூழ்கியுள்ளது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் உணவுப் பட்டியல் வெளியானது வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.