டைட்டானிக் மீட்பு வீரருக்கு பரிசளிக்கப்பட்ட “தங்கப் பைக் கடிகாரம்” ஏலத்தில் படைத்த சாதனை
டைட்டானிக் கப்பல் விபத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய கேப்டனுக்கு பரிசளிக்கப்பட்ட சட்டைப்பை கடிகாரம் மிக உயரிய விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் மிக உயரிய விலையில் விற்கப்பட்ட கடிகாரம்
1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிருக்கு போராடிய நூற்றுக்கணக்கானோரை உயிருடன் மீட்ட கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசளிக்கப்பட்ட “தங்க சட்டைப் பை கடிகாரம்”(gold pocket watch) ஏலத்தில் மிக உயரிய விலையான £1.56 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது.
18 கேரட் டிஃபனி & கோ.வின் (18-carat Tiffany & Co.) தங்க சட்டைப் பை கடிகாரமானது, 1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிரிழந்த 3 பணக்கார தொழிலதிபர்களின் விதவை மனைவிகளால் முன்பு கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு(Arthur Rostron) பரிசளிக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பனிப்பாறைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது தொடர்பான அவசர செய்தியை கேட்ட உடன் விரைந்து செயல்பட்டு, தனது கார்பதியா(Carpathia) கப்பலை திசை திருப்பி நூற்றுக்கணக்கானோரை கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான் காப்பாற்றி இருந்தார்.
டைட்டானிக்கின் மிகப்பெரும் நினைவலைகளை சுமந்துள்ள இந்த கடிகாரம், ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அண்ட் சன்(Henry Aldridge and Son) என்ற நிறுவனத்தால் அமெரிக்காவை சேர்ந்த தனியார் சேகரிப்பாளருக்கு விற்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஏலத்தில் விலை போன டைட்டானிக் கப்பல் தொடர்புடைய பொருட்களின் உச்ச மதிப்பை இந்த பைக் கடிகாரம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |