டைட்டானிக் நினைவுகளை தட்டியெழுப்பிய செய்தித்தாள்! 112 ஆண்டுக்கு பிறகு அலமாரியில் கண்டுபிடிப்பு
பிரபலமான டைட்டானிக் கப்பல் மூழ்கிய செய்தியை விவரிக்கும் செய்தித்தாள் 112 ஆண்டுகளுக்கு வீடு ஒன்றின் அலமாரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
112 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட செய்தித்தாள்
உலகின் முதல் மூழ்காத கப்பல் என்ற விளம்பரப்படுத்தப்பட்ட டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி அதன் பயணிகள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தியை விவரிக்கும் செய்தித்தாள் Staffordshire-யின் Lichfield பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலமாரியில் இருந்து 112 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெய்லி மிரரின் இந்த செய்தித்தாள் ஏப்ரல் 20ம் திகதி 1912ம் ஆண்டு வெளியான பதிப்பு ஆகும், இது விபத்து நடந்த 5 நாட்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது.
ஏலத்தில் விலை போன செய்தித்தாள்
கடல் பேரழிவு மற்றும் சமூக வரலாற்றின் மிக முக்கியமான இந்த செய்தித்தாள் ஆகஸ்ட் 20ம் திகதி செவ்வாய்க்கிழமை 34 பவுண்டுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
செய்தித்தாளை விற்பனை செய்த Charles Hanson ஏலதாரர்கள், இந்த கண்டுபிடிப்பை வரலாற்றின் முக்கிய பகுதி என்று விவரித்தனர்.
இந்த செய்தித்தாளானது 1911-ல் மன்னர் ஜார்ஜ் V-வின் முடிசூட்டு விழாவை உள்ளடக்கிய மற்ற ஆவணங்களுடன் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |