5 உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்
5 உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் உள்ள ஏகப்பட்ட குறைகள் பற்றி தகவல் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளன.
5 உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பல்
சமீபத்தில் உலகையை உலுக்கிய சம்பவம் என்றால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் மாயமாகி உயிரிழந்தது தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் ஆழ்கடலில் மூழ்கியுள்ள இந்த டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிட சாகச சுற்றுலாவை நடத்தி வருகிறது.
அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 கோடீஸ்வரர்கள் சென்றனர்.
கடந்த வாரம் அவர்கள் சென்ற அந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் தகவல் இணைப்பு திடீரென்று துண்டாகி மாயமானது.
இந்தக் கப்பலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்ற நிலையில், 5 பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டனர். இச்சம்பவம் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலின் குறைகள்
இந்நிலையில், தற்போது அந்த 5 கோடீஸ்வரர்களின் உயிரை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் ஏகப்பட்ட குறைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
உலக புகழ் பெற்ற ‘டைட்டானிக்’ படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் ஆழ்கடலில் பல முறை பயணம் செய்துள்ளார். ஆனால், அவர் டைட்டனின் வடிவமைப்பு குறித்து பல கவலையான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
‘டைட்டன்’ நீர்மூழ்கி கப்பலில் கடலில் ஆழமாக செல்ல செல்ல நீருக்கடியில் அழுத்தம் அதிகரிக்கும். அட்லாண்டிக் கடலின் அடிப்பகுதியில் 4,000 மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் கப்பலின் பாகங்கள் கிடக்கின்றன. அப்பகுதியில் அழுத்தம் 400 (bar) பாராக இருக்கும்.
அந்த இடத்திற்கு செல்லும்போது நம்முடைய நாம் இயல்பாக சுவாசிப்பதைவிட 400 மடங்கு அதிகமாக சுவாசிப்போகும். நம் உடலில் உள்ள ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் அதிகரிக்கும். அந்த அழுத்ததை தாங்கக்கூடிய வகையில் ‘டைட்டன்’ கப்பல் வடிவமைக்கப்படவில்லை.
நாம் பொழுதுபோக்கிற்காக ஆழ்கடலில் செல்ல வேண்டுமானால் 40 மீட்டர் தூரம் வரை தான் செல்ல முடியும். இந்த உயிரிழப்புக்கு காரணம், டைட்டன் கப்பலின் பொருள் தேர்வு, வடிவமைப்பு, கார்பன் ஃபைபர் கலவையானது டைட்டானியத்துடன் இணைப்பு, உயர் அழுத்தம் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
How Implosion happened on Titan Submarine. #OceanGateTitan #Titanic pic.twitter.com/ZOCQyLaK5j
— Shilpa (@shilpa_cn) June 25, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |