2023யில் சர்ச்சையை கிளப்பிய மூன்று அரசியல் தலைவர்கள்
2023ஆம் ஆண்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் தமிழர் சீமான் மற்றும் பாஜகவின் அண்ணாமலை ஆகிய மூன்று அரசியல் தலைவர்கள் சர்ச்சையில் வலம் வந்தவர்கள் ஆவர்.
உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய விடயம் மூலம் சர்ச்சை கிளம்பியது.
அதனைத் தொடர்ந்து சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் பேசியது பாரிய அளவில் சர்ச்சையானது.
பாஜாகவின் தலைவராக மாறியபோதே சர்ச்சையில் சிக்கியவர் அண்ணாமலை. ஆரம்பத்தில் அவர் பொய்யான விடயங்களை கூறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.
நாம் தமிழர் சீமான் ஈரோடு தேர்தலின்போது அருந்ததியர் மக்கள் குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்தபடியாக மணிப்பூர் வன்முறை குறித்து பேசும்போது இஸ்லாமியர்களும், கிருத்துவர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சீமான் குறிப்பிட்டது சர்ச்சையாக வெடித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |