2500 கிலோ தக்காளியுடன் லொறி கடத்தல்! நாடகமாடிய இளம் தம்பதியினர் கைது
2.5 டன் அளவிலான தக்காளியை ஏற்றிச் சென்ற லொறியை கடத்திய தம்பதி கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் பெங்களூருவில் ஜூலை 8-ஆம் திகதி நடந்தது. தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த பாஸ்கர் (28), அவரது மனைவி சிந்துஜா (26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த மல்லேஷ் என்பவரின் லொறியை திருடிச் சென்றனர்.
தகவல்களின்படி, பாஸ்கர் மற்றும் சிந்துஜா நெடுஞ்சாலைகளில் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள். சிக்கஜாலா என்ற இடத்தில் தக்காளியுடன் கோலாருக்குச் சென்றுகொண்டிருந்த மல்லேஷ் என்பவற்றின் லொறி, சிந்துஜாவின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.
Representative Image
இந்த சம்பவத்தில் அவர்கள் மல்லேஷிடம் பணம் கேட்டுள்ளனர், ஆனால் மல்லேஷ் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால், மல்லேஷை தாக்கிவிட்டு இருவரும் தக்காளி லொறியை கடத்தினர்.
லொறியில் 2.5 டன் தக்காளி இருந்தது, அதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.2,50,000 ஆகும்.
Representative Image
பின்னர் மல்லேஷ் பொலிஸில் புகார் செய்தார். ஆர்.எம்.சி. யாட் பொலிஸார் விசாரணையின் மூலம் லொறியைக் கண்டுபிடித்து. மேலும், பாஸ்கர் மற்றும் சிந்துஜாவை சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களது குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |