தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி
திமுக நிர்வாகியை தாக்கியவழக்கில் கைதாகிய தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19ம் திகதி நடைபெற்ற தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகியை, தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கி அவரை அரைநிர்வாணமாக அழைத்து சென்றது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இந்தநிலையில் அவர்மீது பொலிஸார் திமுக நிர்வாகியை தாக்கியது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டது என இரண்டு பிரிவுகளில் வழக்குகள் பதிந்து அவரை பூந்தமல்லி கிளைச்சிறையில் கைது செய்து அடைத்தனர்.
இதையடுத்து இந்த வழக்கில், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து அவரை மார்ச் 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.