அண்ணாமலைக்கு உதவ பொலிஸ் வேலையை ராஜினாமா செய்யும் தமிழக காவலர்!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உதவுவதற்காக தனது வேலையை ராஜினாமா செய்யப்போவதாக தமிழக தலைமை காவலர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலைக்கு உதவ போகிறேன்
தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கார்த்திக் (37).
இவர் சுதந்திர தினமான நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"77 ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் சமூகமும், நாடும் வளர்ச்சியடைய வேண்டும். அதற்காக நான் சமூக ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். அதற்கான அறிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.
அதுமட்டுமல்லாம், அண்ணாமலை கட்சிக்கு உதவ பொலிஸ் தேவை. அதனால் நான் எனது பணியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். என் குடும்பத்தினர் இதனால் என் மீது வருத்தம் அடைகிறார்கள். ஆனால், கட்சிக்கு சென்று நான் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது அவர்கள் பெருமைப்படுவார்கள்" என்று கூறினார்.
பொலிஸ் வேலையில் பணிச்சுமை இல்லை
மேலும் பேசிய காவலர் கார்த்திக்,"நான் 13 ஆண்டுகளாக பொலிஸ் பணியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு பணிச்சுமை இல்லை. ஆனால், நான் தற்போது மக்கள் சேவை செய்ய போகிறேன். இன்று பாஜக தான் நல்ல கட்சியாக இருப்பதால் அதில் நான் இணைய போகிறேன்.
எனது ஆய்வின் மூலம் திமுக அரசின் செயல் தெரிய வந்து திமுக வேண்டாம் என்று சொல்வார்கள். மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேரர்தலும் நடத்த வேண்டும் என்று சொல்வார்கள். நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன்" எனக் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |