தமிழக மாணவனை அரிவாளால் தாக்கிய 'சாதி' - குரல் கொடுத்த தெருக்குரல் அறிவு
தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு பாடகர் தெருக்குரல் அறிவு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவனை வீடு புகுந்து தாக்கிய சக மாணவர்கள்
தமிழகத்தில் உள்ள நாங்குநேரியில் சாதி விரோதம் காரணமாக பிளஸ் 2 படிக்கும் சின்னத்துரை (17) என்ற மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியுள்ளனர்.
அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது தாத்தா மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதில், படுகாயம் அடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தெருக்குரல் அறிவு
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த தெருக்குரல் அறிவு தனது பதிவில்,"சாதியற்ற வருங்காலத்தை உருவாக்க, physics chemistry maths எல்லாத்தையும் போல, வகுப்பறைகளில் சாதியத்தின் சமூக விளைவை பாடமா சொல்லிக்கொடுங்க!
Anti-Caste மனநிலை மாணவப்பருவத்திலேயே எல்லாருக்கும் கற்பிக்கப்படனும். இடஒதுக்கீடு ஒரு இலவசம் , ஆண்ட பெருமைகள் , சாதி அடையாள கயிறுகள், குறியீடுகள் போன்ற தவறான புரிதல்களை அரும்பிலேயே கிள்ளி எறிவது தான் சமகால கல்வியின் பிரதான நோக்கமா இருக்கணும்.
சாதிய வன்கொடுமைகளில் யாருடைய ரத்தம் காலகாலமாக சிந்திக்கிடக்கிறது என விவாதிக்காமல் , எல்லா ரத்தமும் சிவப்பு என்றும் சாதியை ஒரு ஆபத்தில்லாத பண்பாட்டு வடிவம் என்றும், இருந்தும் இல்லாத ஒன்று என கடந்து போவதும் மேலும் ஆபத்தை வருவிக்கும்!
சக மாணவன் படிப்பதையும் சுயமுன்னேற்றம் அடைவதையும் கூட ஏற்க முடியாத மனநோயின் வேரை கண்டறிந்து வீழ்த்தாமல், தண்டனைகளும் கண்டனங்களும் மட்டும் பட்டியலினத்தவர் மீதான வெறுப்பு மனநிலையை மாற்றாது" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |