தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்
இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளதை தொடர்ந்து இன்று முதல் மூன்று நாட்களுக்கு(நவ 5 - நவ 7) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றின் பெரும்பான்மையான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, வேலூர், விருதுநகர், கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
குறிப்பாக கோவை மாவட்டம் பில்லூர் அணை பகுதியில் அதிகபட்சமாக 13cm மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக ராமநாதபுரம் கமுதியில் 12 செமீ மழை பெய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |