ரூ.10 லட்சம் சம்பாதிக்க மொடா குடிகாரனா இருந்தா போதும்.., தமிழக அரசை விமர்சித்த நடிகை கஸ்தூரி
கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அளித்த நிலையில் நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.
ரூ.10 லட்சம் நிவாரணம்
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது, கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான விசாரணைக்குழு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து விசாரித்தது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
கஸ்தூரி விமர்சனம்
அந்தவகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், "10 லட்சம். விளையாட்டு வீரருக்கா? போரில் உயிர் நீத்தவருக்கா? விஞ்ஞானிக்கோ விவசாயிக்கோ வா?
குடும்பத்தை கைவிட்டு கள்ளசாராயத்தை குடித்து செத்தவருக்கு. இந்த கேடு கெட்ட dravidamodel லில் பத்து லட்சம் சம்பாதிக்க உண்மையா உழைக்க தேவையில்லை. மொடா குடிகாரனா இருந்தா போதும்.
இதை எப்படி எடுத்து கொள்வது? விற்ற பொருளில் complaint வந்ததால் நஷ்ட ஈடு போலவா? மக்களின் வாயை அடைக்கவா? வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஒரு கம்பெனி கொடுக்கும் கவர்ச்சிகரமான scheme என்றா? அப்படி என்ன திமுக அரசுக்கும் விஷச்சாராய கம்பனிக்கும் தொடர்பு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |