தென்மேற்கு வங்கக் கடலில் கீழடுக்கு சுழற்சி.., இந்த 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் மழை
தமிழகத்தில் உள்ள சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
11 மாவட்டங்களில் கனமழை
இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் தென்கடலோர பகுதிகளில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |