அக்டோபர் 7: இஸ்ரேல் காஸா போர் துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, காஸா பகுதியிலிருந்து ஹமாஸ் என்னும் பாலஸ்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் திடீரென இஸ்ரேலுக்குள் ராக்கெட்கள் மூலம் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
இஸ்ரேல் காஸா போர் துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு
இஸ்ரேல் காஸா போர் துவங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
இந்த காலகட்டத்தில், 726 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பதிலுக்கு காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், அக்டோபர் 7 தாக்குதல் துவங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில், உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் திரையில் காட்டப்பட்டுள்ள நிலையில், நூற்றுக்கணக்கானோர் கைகளில் மெழுகுவர்த்திகளுடன் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவருவதாக AFP ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பும், ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த, இஸ்ரேல் பதிலடி கொடுக்கலாம் என்பதால், போர் மேலும் மும்முரமாகும் சூழலும் உருவாகியுள்ளதால் அச்சம் உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |