லிபியாவில் புயல்: 2ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
கிழக்கு லிபியாவில் டேனியல் புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகருக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ஸ்பெயினில் ரயில் கடவையை கடக்க முயன்ற போது ரயில் மோதி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் தானிய கிடங்குகள் மீது ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் இதுவரை ஒரு மில்லியன் மக்களுக்கு ஒரு ஆண்டிற்கான உணவு சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ பனிப்போருக்கு பிறகு அடுத்த ஆண்டு மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியை மேற்கொள்ள இருப்பதாக பைனான்சியல் டைம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |