பேருந்தில் விசித்திரமாக அசைந்துகொண்டிருந்த சூட்கேஸ் - சந்தேகத்தில் திறந்து பார்த்த சாரதிக்கு அதிர்ச்சி
வெளிநாடொன்றில் 2 வயது குழந்தையை சூட்கேஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தில் 2 வயது பெண் குழந்தையை சூட்கேஸில் அடைத்து வைத்துக் கொண்டு பேருந்தில் பயணித்த 27 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஆக்லாந்தின் வடபகுதியில் உள்ள கைவாகா என்ற இடத்தில் நிகழ்ந்தது.
அப்பேருந்தை இயக்கிய சாரதி, சூட்கேஸில் அசைவைக் கவனித்ததையடுத்து சந்தேகமடைந்துள்ளார்.
அவர் அந்த சூட்கேஸை திறந்தபோது, அதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்பதும், குழந்தையின் உடல்நிலை மிகுந்த வெப்பத்தில் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக அப்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பொதுவாக பயணிகளின் சாமான்கள் வைக்கப்படும் கீழ் பகுதியில்தான் அந்த குழந்தையும் இருந்தது. இது தொடர்பாக டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் சைமன் ஹாரிசன், “அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாள். பெரும் ஆபத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.
குழந்தையின் நலனை பாதிக்கும் வகையில் நடத்தியதற்கும், தவறான பராமரிப்பிற்கும் அந்த பெண்ணிடம் இருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் குற்றச்சாட்டுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக Oranga Tamariki (குழந்தைகள் நலத்துறை) அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |