‘நான் சாகவில்லை’... தலிபான்கள் தாக்கியதில் கொல்லப்பட்டதாக சொன்ன நிருபர் ட்விட்டரில் பரபரப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்காளல் தாக்கப்பட்ட TOLO NEWS நிருபர் பலியானதாக செய்தி பரவிய நிலையில், அச்செய்தி பொய் என அவரே ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
TOLO NEWS நிருபர் Ziar Yaad மற்றும் அவரது ஒளிப்பதிவாளருடன் காபூலில் உள்ள ஹாஜி யாகூப் சந்திப்பில் வறுமை, வேலையின்மை குறித்து செய்தி சேகரித்துள்ளனர்.
இதன்போது Ziar Yaad மற்றும் அவரது ஒளிப்பதிவாளரையும் சரமாரியாக தாக்கிய தலிபான்கள், அவர்களிடமிருந்து கமெரா, உபகரணங்கள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
Ziar Yaad மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, Ziar Yaad-ஐ தாக்கிய நபர்களைத் தேடி வருவதாக ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட்டின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Zabihullah Mujahid உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், தலிபான்களால் தாக்கப்பட்ட நிருபர் Ziar Yaad உயிரிழந்துவிட்டதாக TOLO NEWS செய்தி வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, தான் மரணமடைந்ததாக பரவிய செய்தி பொய் என Ziar Yaad ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
لتو کوب یک خبرنگار طلوعنیوز از سوی طالبان در کابلhttps://t.co/giJkqslRPA pic.twitter.com/vtPIduFIdE
— TOLOnews (@TOLOnews) August 26, 2021
Ziar Yaad ட்விட்டரில் பதிவிட்டதாவது, காபூலில் செய்தி சேகரிக்கும் போது தலிபான்களால் நான் தாக்கப்பட்டேன். கமெராக்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் எனது தனிப்பட்ட மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சிலர் நான் மரணமடைந்துவிட்டதாக பொய்யாக செய்தி பரப்பி உள்ளனர் என தெளிவுப்படுத்தியுள்ளார்.
I still don't know why they behaved like that and suddenly attacked me. The issue has been shared with Taliban leaders; however, the perpetrators have not yet been arrested, which is a serious threat to freedom of expression.
— Ziar Khan Yaad (@ziaryaad) August 26, 2021