இளவரசர் வில்லியமுடன் கௌரவ விருந்தினர்..3 விவாகரத்து..25 வயது குறைவான ரஷ்ய பெண்ணுடன் டேட்டிங் செய்யும் டாம் குரூஸ்
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தன்னை விட 25 வயது குறைவான ரஷ்ய பெண்ணுடன் டேட்டிங் செய்து வருவது பேசுபொருளாகியுள்ளது.
டாம் குரூஸ்
ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் டாம் குரூஸ் (61). தனது மிஷன் இம்பாஸிபிள் (Mission Impossible) படங்கள் மூலம் உலகளவில் ஏராளமான ரசிகர்களை இவர் கொண்டுள்ளார்.
@Mike Coppola/WireImage
மூன்று நடிகைகளை திருமணம் செய்து அவர்களை விவாகரத்து செய்த டாம் குரூஸ் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தான், லண்டனின் ஏர் ஆம்புலன்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில், இளவரசர் வில்லியமுடன் கௌரவ விருந்தினராக டாம் குரூஸ் கலந்துகொண்டார்.
@Dan Kitwood/Getty Images
25 வயது குறைவான பெண்
அவருடன் டேட்டிங் செய்யும் ரஷ்யாவைச் சேர்ந்த எல்சினா கைரோவா (Elsina Khayrova) என்ற பெண்ணும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனால் இவர்கள் இருவரும் தனித்தனியாக தான் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தனர்.
எனினும், Knightsbridgeயில் உள்ள 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஆடம்பர பங்களாவில் பலமணிநேரம் செலவிட்டதாக நண்பர்கள் கூறுகின்றனர்.
61 வயதாகும் டாம் குரூஸும், 36 வயதாகும் எல்சினாவும் உறவில் இருப்பதை ஒரு source வெளிப்படுத்தியுள்ளது.
@AFP,Elsina_K/Instagram
கடந்த சில வாரங்களாக இந்த ஜோடி மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், ஆனால் தங்கள் தனியுரிமையைப் பராமரிக்க விரும்புவதால், ஒன்றாக புகைப்படம் எடுக்கப்படாமல் இருக்க மிகவும் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாமும், எல்சினாவும் கடந்த டிசம்பர் மாதம் Mayfair-யில் ஒரு விருந்தின்போது சந்தித்ததாக நம்பப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |