நாளை பூமியை நோக்கி அதிகூடிய வேகத்தில் வரும் சிறுக்கோள்! நாசா வெளியிட்ட தகவல்
விண்வெளியில் இருந்து திடீர் என்று சிறுக்கோள்கள் அல்லது எரி நட்சத்திரங்கள் வருகை தரும்.
பாறை, உலோகம் மற்றும் பனியால் ஆன இந்த குறுங்கோள்கள் பூமியை நோக்கி வரும் போது அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதை கண்கானித்துக் கொண்டேஇருக்கும். ஏனென்றால் அதனால் பூமிக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாது என்று.
இவ்வாறு கண்கானித்து வந்தாலும் சில சமயங்களில் அது பூமியை தாக்கிவிட்டே செல்லும். அதனால் ஏற்பட்ட தாக்கங்களும் அழியாமல் இன்னும் காணப்படுகிறது.
பூமியை நோக்கி வரும் புதிய கோள்
மணித்தியாலத்திற்கு 67 ஆயிரத்து 656 கி.மீ வேகத்தில் 150 அடி விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியை நோக்கி வருகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த கோளுக்கு நாசா '2023 எப்இசட்3' என்ற பெயரை வைத்துள்ளது.
இந்த சிறியகோள் நாளை (6ஆம் திகதி) பூமியை நெருங்கி வருகிறது.
நாசா வெளியிட்ட கருத்து
இதனால் யாரும் அச்சப்படதேவையில்லை என்று கூறுகின்றனர்.
ஏனென்றால் இந்த சிறுகோள் சுமார் 26 லட்சத்து 10 ஆயிரம் மைல் தொலைவில் பூமிக்கு அருகில் வந்து மீண்டும் செல்ல போகின்றது.
இதனால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.