அதிகளவில் உணவை வீணாக்கும் நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் இடம் என்ன?
உலகளவில் உணவை அதிகம் வீணாக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
வீணாக்கப்பட்ட உணவுகள்
உலகில் உணவு கிடைக்காமல், நாளொன்றுக்கு ஒருவேளை மட்டும் உணவு உண்ணும் மக்கள் மில்லியன் கணக்கில் உள்ளனர்.
அதேவேளையில், உலகளவில் ஆண்டுக்கு பில்லியன் டன் அளவிலான உணவுகள் வீணடிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் உணவு வீணாக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்(UNEP) வெளியிட்டுள்ளது.
இதன்படி, உலகில் உள்ள ஒவ்வொரு நபரும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 132 கிலோ உணவை வீணடித்துள்ளனர். இதில், 79 கிலோ உணவை வீடுகளில் வீணடித்துள்ளனர்.
சீனா
உலகளவில் உணவை அதிகம் வீணாக்கும் நாடுகளில் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனாவில் ஆண்டுக்கு சுமார் 108.6 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள்தொகை படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 76 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
இந்தியா
இதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 78.3 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள்தொகைப்படி, ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 55 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
அமெரிக்கா
உணவை வீணாக்குவதில் அமெரிக்கா உலகளவில் 3வது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் ஆண்டு தோறும், 24.7 மில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 73 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
பிரேசில்
ஆண்டு தோறும், 20.2 மில்லியன் டன் உணவை வீணாக்கி பிரேசில் இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
பிரேசில் மக்கள்தொகைப்படி ,ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 94 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
இந்தோனேசியா
ஆண்டு தோறும்,14.7 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்தோனேசியா இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
இந்தோனேசிய மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 53 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
ஜேர்மனி
ஜேர்மனி ஆண்டு தோறும், 6.5 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
ஜேர்மனி மக்கள்தொகைப்படி ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 78 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
ரஷ்யா
ரஷ்யா ஆண்டு தோறும், 4.8 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
ரஷ்ய மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 33 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ்
பிலிப்பைன்ஸ் ஆண்டு தோறும், 2.9 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்த பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
பிலிப்பைன்ஸ் மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 26 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா ஆண்டு தோறும், 2.8 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்த பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 47 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
கானா
கானா ஆண்டு தோறும், 2.8 மில்லியன் டன் உணவை வீணாக்கி இந்த பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.
கானாவின் மக்கள்தொகைப்படி, ஒரு நபர் சராசரியாக ஆண்டுக்கு 84 கிலோ உணவை வீணடித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |