2025-ஆம் ஆண்டில் அதிக ராணுவ செலவுகளை கொண்ட 10 நாடுகள்
2025-ஆம் ஆண்டில் அதிக ராணுவ செலவுகளை கொண்ட 10 நாடுகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம்.
உலக ராணுவ செலவினங்கள் 2025-ஆம் ஆண்டில் மாபெரும் வளர்ச்சியடைந்துள்ளன.
முன்னணி நாடுகள் பாதுகாப்பு செலவுகளை பெரிதும் அதிகரித்து, உயர் தொழில்நுட்ப ஆயுதங்கள் வாங்கி, மூலோபாய ரீதியாக தங்கள் பாதுகாப்பு மையங்களை பலப்படுத்தி வருகின்றன.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், உலகளாவிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தங்கள் ராணுவத்திற்கு அதிகளவில் முதலீடு செய்து வருகின்றன.
2025-ஆம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ செலவின நாடுகள்
முதல் இடத்தில் அமெரிக்கா
அமெரிக்கா $895 பில்லியன் செலவினத்துடன் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்கிறது.
சீனா $266.85 பில்லியன் ஒதுக்கி இரண்டாவது இடத்தில் உள்ளது, குறிப்பாக தன் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்க முயற்சி செய்கிறது.
ரஷ்யா $126 பில்லியன் செலவிட்டு மூன்றாவது இடத்தில் உள்ளது.
4வது இடத்தில் இந்தியா - பாதுகாப்பு செலவு அதிகரிப்பு
இந்தியா, $75 பில்லியன் (ரூ.6.81 லட்சம் கோடி) பாதுகாப்பு செலவினத்துடன் 2025-ஆம் ஆண்டில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது நாட்டின் மொத்த செலவினங்களில் 13.45% ஆகும்.
இராணுவ நவீனமயமாதல், பாதுகாப்பு ஆயுத வளர்ச்சி, மற்றும் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்துதல் போன்றவை இந்த அதிகரிப்புக்குக் காரணங்களாக இருக்கின்றன.
மற்ற முக்கிய நாடுகளின் நிலை
சவுதி அரேபியா $74.76 பில்லியன் செலவிட்டு 5வது இடத்திலும், பிரித்தானியா $71.5 பில்லியன், ஜப்பான் $57 பில்லியன், அவுஸ்திரேலியா $55.7 பில்லியன், பிரான்ஸ் $55 பில்லியன் மற்றும் உக்ரைன் $53.7 பில்லியன் செலவுடன் பின் தொடர்கின்றன.
டாப் 10 பட்டியல்
இடம் | நாடு | பாதுகாப்பு செலவு (USD) |
1 | அமெரிக்கா | $895,000,000,000 ($895 பில்லியன்) |
2 | சீனா | $266,850,000,000 ($266.85 பில்லியன்) |
3 | ரஷ்யா | $126,000,000,000 ($126 பில்லியன்) |
4 | இந்தியா | $75,000,000,000 ($75 பில்லியன்) |
5 | சவுதி அரேபியா | $74,760,000,000 ($74.76 பில்லியன்) |
6 | பிரித்தானியா | $71,500,540,000 ($71.5 பில்லியன்) |
7 | ஜப்பான் | $57,000,000,000 ($57 பில்லியன்) |
8 | அவுஸ்திரேலியா | $55,700,000,000 ($55.7 பில்லியன்) |
9 | பிரான்ஸ் | $55,000,000,000 ($55 பில்லியன்) |
10 | உக்ரைன் | $53,700,000,000 ($53.7 பில்லியன்) |
உலக ராணுவ செலவினம் ஏன் அதிகரிக்கிறது?
உலகளாவிய நிலைமைகள் மாறிவருவதால் பாதுகாப்பு செலவினம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மேம்பாடுகள், இராணுவ உபகரணங்கள், மற்றும் போர்போக்குகளுக்கான தயாரிப்புகள் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன.
உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவாகும் பதற்றங்கள் காரணமாக பல நாடுகள் தங்களது ராணுவங்களை வலுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |