மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் 10 ரன் சேஸ்கள் - முதலிடத்தில் இந்தியா
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச 10 ரன் சேஸ்களை பார்க்கலாம்.
IND vs AUS அரையிறுதி
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டி நேற்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையே நடைபெற்றது.

இதில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய அவுஸ்திரேலிய அணி, 49.5 ஓவர்களில் 338 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா நிர்ணயித்த 339 ஓட்டங்கள் என்ற இலக்கை, 5 விக்கெட்களை இழந்து, 48.3 ஓவர்களில் அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி.

இதன் மூலம், மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில், அதிகபட்ச ஓட்டங்களை வெற்றிகரமாக சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை நடைபெற்ற முதல் 10 வெற்றிகரமான ரன் சேஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
IND vs AUS 2025
 
நேற்றைய அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா நிர்ணயித்த 339 என்ற இலக்கை, இந்திய அணி சேஸ் செய்ததே மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் சேஸ் ஆகும்.
IND vs AUS 2025
2025 மகளிர் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, 48.5 ஓவர்களில் 330 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்திய நிர்ணயித்த 331 என்ற இலக்கை 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில் சேஸ் செய்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.
SL vs SA 2024
2024 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி, 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து, 301 ஓட்டங்கள் குவித்தது.

302 என்ற இலக்கை, 44.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பில், 305 ஓட்டங்கள் குவித்து வெற்றிகரமாக சேஸ் செய்தது தென் ஆப்பிரிக்கா அணி.
AUS vs NZ 2012
2012 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை இழந்து 288 ஓட்டங்கள் குவித்தது.

289 என்ற இலக்கை அவுஸ்திரேலிய அணி, 46.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பில் அடித்து வெற்றி பெற்றது.
AUS vs IND 2023
2023 ஆம் ஆண்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்திய அவுஸ்திரேலியாவிற்கு இடையேயான போட்டியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ஓட்டங்கள் குவித்தது.

அவுஸ்திரேலிய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பில், 285 ஓட்டங்கள் குவித்து சேஸ் செய்தது.
AUS vs IND 2025
2025 ஆம் ஆண்டில், அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்கள் குவித்தது இந்திய அணி.
282 என்ற இலக்கை 44.1 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்களை இழந்து அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
NZ vs ENG
டெர்பியில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 280 ஓட்டங்கள் சேஸ் செய்தது.
ENG vs AUS

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், அவுஸ்திரேலியா அணி 280 ஓட்டங்களை சேஸ் செய்தது 8வது அதிகபட்ச சேசிங் ஆகும்.
SL vs IND 2025
2025 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை அணி 49.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பில் 278 ஓட்டங்கள் எடுத்து சேஸ் செய்தது.
NZ vs AUS 2017
2017 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பில் 276 ஓட்டங்களை சேஸ் செய்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        