உலகிலேயே இந்துக்கள் அதிகம் வசிக்கும் முதல் மூன்று நாடுகள் எது தெரியுமா?
உலகிலேயே இந்துக்கள் அதிகம் வசிக்கும் முதல் மூன்று நாடுகள் எது என்பது குறித்த தகவலை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்தெந்த நாடுகள்?
இந்துக்களை பொறுத்தவரை இந்தியாவில் 96.63 கோடி பேர் உள்ளனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் 79 சதவீதம் பேர் உள்ளனர்.
இப்போது நாம் மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் நேபாளத்தில்தான் இந்துக்கள் அதிகமானோர் உள்ளனர்.
அதாவது நேபாளத்தில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்துக்கள் தான்.
மத்திய புள்ளியியல் தகவலின் அடிப்படையில் , 2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நேபாளத்தில் 81.19 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர். அதாவது 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரத்து 744 இந்துக்கள் உள்ளனர்.
முன்பு ஒரு காலத்தில் நேபாளம் இந்து தேசமாக இருந்தது. ஆனால், இந்த நாடு 2006 இல் அது மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
மேலும், நேபாளத்தில் உள்ள கலாச்சாரம் திபெத் மற்றும் இந்தியாவை போன்று உள்ளது. இங்கு, 9 சதவீத பௌத்தர்களும் 4.4 சதவீத முஸ்லிம்களும் இருக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியான இடத்தில் இந்தியா உள்ளது. இங்குள்ள மொத்த மக்கள் தொகையில் 79 சதவீதம் பேர் இந்துக்கள் உள்ளனர்.

உங்களை கையெடுத்து கும்புடுறேன், கட்டாயப்படுத்தாதீங்க.., மொழி விவகாரம் குறித்து நடிகர் வடிவேலு பேச்சு
அதன்படி, நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக அதிக இந்துக்கள் கொண்ட நாடுகளில் மொரிஷியஸ் உள்ளது. இந்த நாட்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் உள்ளனர்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மொரீஷியஸில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 48.5 சதவீதம் இந்துக்கள் இருந்தனர். இது தற்போது 51 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நாட்டில் இந்து மதமானது ஒப்பந்த வேலை மூலம் பரவ ஆரம்பித்தது. அதாவது, கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் பணிபுரிய பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொரீஷியஸுக்கு ஏராளமான இந்துக்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த காரணத்தினால் இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.மேலும், அதிக இந்தியர்களைக் கொண்ட நாடாகவும் மொரீஷியஸ் மாறியுள்ளது.
1836 -ம் ஆண்டில் தான் முதன்முதலாக மொரீஷியஸுக்கு இந்தியர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் தான் பிஜி, ஜமைக்கா, டிரினிடாட், மார்ட்டினிக், சுரினாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முக்கியமாக மொரிஷியஸ் நாட்டின் அரசாங்கத்திலும் இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர். அங்குள்ள அமைச்சர்களும் பெரும்பாலானோர் இந்தியர்கள் தான்.
மொரீஷியஸுக்கு அடுத்தடுத்த இடங்களில் பிஜியில் 27.9 சதவீதம் இந்துக்களும், கயானாவில் 23.3 சதவீத இந்துக்களும், பூட்டானில் 22.5 சதவீத இந்துக்களும், டொபாகோவில் 18.2 சதவீத இந்துக்களும், கத்தாரில் 15.1 சதவீத இந்துக்களும், இலங்கையில் 12.6 சதவீத இந்துக்களும் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |