2000 ஆண்டுகளுக்கு முந்தைய நாட்டிலிருந்து வந்த பெண்ணால் பரபரப்பு: உண்மை என்ன?
அமெரிக்க விமான நிலையம் ஒன்றில், உலகில் இல்லாத நாடொன்றின் கடவுச்சீட்டுடன் பெண் ஒருவர் அதிகாரிகளை நாடிய சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
எங்கும் காணப்படாத
தொடர்புடைய பெண்மணி Torenza என்ற உலகில் எங்கும் காணப்படாத நாட்டில் இருந்து வந்துள்ளார் என்றே கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் சமூக ஊடகத்தில் வெளியான பதிவொன்றில்,

இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு இருந்த ஒரு பண்டைய நாகரிகத்தின் ஒரு பகுதியான Torenza என்ற நாட்டின் குடிமகள் அவர் என்றும், ஆனால் அட்லாண்டிஸ் மற்றும் லெமூரியா நாகரிகங்கள் போன்று இந்த Torenza-வும் மண்ணோடு மண் அடிந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, சுமார் 2000 வருடங்களுக்குப் பிறகு 1954ல் Torenza மீண்டும் வெளிக்கொண்டுவரப் பட்டதாகவும், அதனாலையே அந்த நாட்டின் உத்தியோகப்பூர்வ கடவுச்சீட்டுடன் பெண் ஒருவர் அமெரிக்க விமான நிலையத்தில் காணப்பட்டார் என்றும் இணையவாசிகள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால், முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் அப்படியான ஒரு நாடு இல்லவே இல்லை என்றே உறுதி செய்யப்பட்டது. Torenza நாடு தொடர்பில் நம்பகமான வரலாற்று அல்லது தொல்பொருள் சான்றுகள் வரலாற்றில் எங்கும் காணப்படவில்லை என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
AI தொழில்நுட்பத்தால்
புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலரும் Torenza பற்றி குறிப்பிடும் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் அல்லது சரிபார்க்கப்பட்ட கலைப்பொருட்கள் எதுவும் இதுவரை உலகில் எந்த நாட்டிலும் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இது வெறும் இணையத்தில் மட்டும் உலாவும் புரளி என்றும் ஒதுக்கியுள்ளனர். இந்த நிலையில், அமெரிக்க விமான நிலையத்தில் காணப்பட்ட Torenza பெண்மணியின் காணொளி உண்மையில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும், அவர் வைத்திருக்கும் கடவுச்சீட்டில் உள்ள தரவுகள் மறைக்கப்பட்டு இருந்தது என்றும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவர் காணப்பட்டதாக கூறப்படும் அமெரிக்க விமான நிலையமும் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றெ கூறுகின்றனர். அமெரிக்க அதிகாரிகளும் இப்படியான ஒரு சம்பவம் எந்த விமான நிலையத்திலும் நடக்கவில்லை என உறுதி செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        