கனடாவில் நூதன முறையில் நடந்த ஓன்லைன் திருட்டு! பெண்ணின் புகைப்படம் வெளியீடு
கனடாவில் நூதன முறையில் நடைபெற்ற ஓன்லைன் திருட்டு தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓன்லைன் மோசடி
ரொறன்ரோ பொலிசார் கூறுகையில், கடந்த பிப்ரவரி 11ஆம் திகதி ஹன்னா அவென்யூ மற்றும் கிழக்கு லிபர்ட் தெருவில் மதியம் 3 மணியளவில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஓன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்தார்.
ஆனால் சந்தேக நபர் டெலிவரி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பொருளை வேறு இடத்திற்கு வந்து கொடுக்கும்படி ஒரு முகவரியை சொன்னார். அங்கு சென்று பார்சலை வாங்கி சென்றிருக்கிறார்.
TPS/Handout
காவல்துறை வெளியிட்ட புகைப்படம்
இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட நபரை பொலிசாரால் இன்னும் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட கருப்பு நிற தலைமுடியை கொண்ட பெண்ணை தேடி வருவதாக பொலிசார் ஒரு புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர்.
குளிர்காலத்தில் அணியும் ஜாக்கெட் உடையும், கருப்பு நிற பேண்டும் அவர் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர்.