கனடாவில் 20 வயது இளைஞர் மீது துப்பாக்கி சூடு: 14 வயது சிறுவன் கைது!
கனடாவின் டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 14 வயது சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
துயரமான துப்பாக்கி சூடு
டொரண்டோவில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 20 வயதான அஜய் சிம்ப்சன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
ஜூன் 24 ஆம் திகதி ஜேன் ஸ்ட்ரீட்(Jane Street) மற்றும் ஃபால்ஸ்டஃப் அவென்யூ(Falstaff Avenue) பகுதியில் துப்பாக்கி சத்தம் கேட்டு காவல்துறை விரைந்தது.
இதையடுத்து நான்கு நபர்கள் துப்பாக்கிகளுடன் லைட் நிற SUV காரிலிருந்து இறங்கி துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கி சூடு நடத்திய பின்னர், சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
14 வயது சிறுவன் மீது வழக்கு
துப்பாக்கி காயங்களுடன் கண்டறியப்பட்ட சிம்ப்சன் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில், வியாழக்கிழமை அன்று காவல்துறை அதிகாரிகள் 14 வயதான ஒரு சிறுவனை கைது செய்து, முதல் தர கொலை குற்றச்சாட்டை சுமத்தினர்.
குற்றவியல் நீதிச் சட்டத்தின் காரணமாக, அவரது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாது. மீதமுள்ள மூன்று சந்தேக நபர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |