எச்சரிக்கையை கவனியுங்கள்! லண்டனில் கிங்ஸ் கார்டு குதிரையிடம் கடி வாங்கிய பெண்மணி
சுற்றுலா பெண் ஒருவர் லண்டனின் Household Cavalry அருங்காட்சியகத்தில் உள்ள கிங்ஸ் கார்டு குதிரையால் கடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருப்பு தொப்பி மற்றும் பிங்க் ஃபிலாய்ட் சட்டை(Pink Floyd shirt) அணிந்திருந்த சுற்றுலா பயணி, குதிரை மற்றும் கிங்ஸ் கார்டு வீரருக்கு அருகில் நின்று கொண்டிருப்பதை காட்சிகள் காட்டுகின்றன.
அவர் கேமராவை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக குதிரை திடீரென்று பாய்ந்து அவள் கையைக் கடித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி வலியில் கதறியதோடு, காயமடைந்த கையை பிடித்தபடி பின்வாங்கினார்.
இதையடுத்து மனிதர் ஒருவர் பஞ்சு துணியைக் கொண்டு அவளுக்கு உதவ முயற்சிக்கிறார், இருப்பினும் அந்த பெண்மணி அதிர்ச்சியில் மயங்குவது போல் தெரிகிறது.
வீடியோவின் இறுதியில், அந்த பெண் பதட்டத்துடன் தரையில் உட்கார்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.
குதிரைகள் கடிக்கக்கூடும் மற்றும் கடிவாளங்களை தொட வேண்டாம் என அப்பகுதியில் எச்சரிக்கை அடையாளங்கள் இருந்தும், துரதிர்ஷ்டவசமாக இந்த பெண் சுற்றுலா பயணி இதை கவனிக்கவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |