உணவு சவாலில் ஈடுபட்ட சமூக வலைதள பிரபலம்: வயிறு சிதைத்து ஏற்பட்ட விபரீதம்!
உணவு சவாலில் ஈடுபட்ட போது சீனாவை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சமூக வலைதளத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து கொண்டிருந்த போது உணவு சவாலில் ஈடுபட்ட 24 வயதான சீன சமூக வலைதள செல்வாக்காளர் Pan Xiaoting கடந்த ஜூலை 14ம் திகதி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Pan Xiaoting அதிகப்படியான உணவு உட்கொள்வதற்கு பெயர் பெற்றவர், இவர் தொடர்ச்சியாக 10 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பிடும் சவால்களில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
literally a victim of gluttony:
— Bad AI (@Bad_AI_) July 20, 2024
food blogger dies on stream from overeating—her stomach was deformed, and it was packed with undigested food.
24-year-old Pan Xiaoting streamed mukbangs
Pan streamed for up to 10 hours a day, consuming up to 10 kg of food per stream.
she had… pic.twitter.com/zrlzC6mSvJ
சில தகவல்களின்படி, அவர் ஒரு உட்கொள்ளுதலில் 10 கிலோகிராம் உணவை உட்கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமீபத்தில் Xiaoting ஈடுபட்ட உணவு சவாலின் போது உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
பிரேத பரிசோதனையில், செரிக்கப்படாத உணவுடன் சிதைந்த வயிறு காரணமாக அவர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை மீறி, Xiaoting இந்த ஆபத்தான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
Xiaoting மரணம் சமூக வலைதளங்களில் ஆரோக்கிய பிரச்சினைகள் குறித்த கவலையைத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |