தள்ளுவண்டியில் உணவு விற்று மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கும் வியாபாரி
இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில், தள்ளுவண்டியில் உணவு வியாபாரம் செய்யும் வியாபாரி மாத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறியுள்ளார்.
தள்ளுவண்டி வியாபாரம்
பொதுவாகி ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு அங்கு பிரபலமான உணவுகள் இருக்கும். திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, மும்பை வடபாவு என்பது போல மத்திய பிரதேசத்தின் இந்தூரில் போஹா உணவு மிகவும் பிரபலமானது.
Representative image
இந்த போஹா உணவானது அவல், வேர்க்கடலை ஆகியவற்றை பயன்படுத்தி தாயாரிக்கப்படுவதாகும். இதனை, இந்தூர் சாலைகளில் தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து வருவார்கள்.
அந்தவகையில், தள்ளுவண்டியில் போஹா உணவு விற்பனை செய்யும் வியாபாரிகள் தினமும் ரூ.2,500 வரை சம்பாதிக்கிறார்கள். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் தனி நபர்கள் கூட இவ்வளவு சம்பாதிக்க முடியவில்லை.
மாதத்திற்கு ரூ.4.5 லட்சம்
இந்நிலையில் தள்ளுவண்டியில் போஹா விற்பனை செய்யும் ஒருவர் கூறுகையில், "நான் ஒரு தள்ளுவண்டியின் மூலம் வியாபாரம் செய்து தினமும் ரூ.2,500 சம்பாதிக்கிறேன். இதே போல, மொத்தம் 6 தள்ளுவண்டிகளில் விற்பனை செய்து மாதத்திற்கு ரூ.4.5 லட்சம் வரை சம்பாதிக்கிறேன்" என்றார்.
இப்படி சாலைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகளின் கூற்றுப்படி பார்த்தல், ஆண்டுக்கு சுமார் ரூ.54 லட்சம் லாபம் சம்பாதிக்கிறார். இரண்டே வருடத்தில் இவரது வருமானம் ரூ.1 கோடியை தொடும் அளவுக்கு உள்ளது.
இவர்களை போன்ற அமைப்புசாரா துறையை சேர்ந்தவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |