மீண்டும் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிப்பு! இந்த முறை என்ன பிரச்சினை?
சூயல் கால்வாயில் மீண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கப்பல் போக்குவரத்து வலைதளங்களான MarineTraffic மற்றும் TankerTrackers தெரிவித்துள்ளது.
ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவர் கிரீன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 23-ம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.
சரியாக ஒரு வாரம் நடந்த தீவிர மீட்பு பணியின் பலனாக எவர்கிரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து நகர்த்தப்பட்டு மீண்டும் மிதக்கத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மாலையில் அந்த கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்ட பின்னர் சூயஸ் கால்வாயில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பியது.
இந்நிலையில் ஏப்ரல் 6 செவ்வாயன்று சூயஸ் கால்வாயின் தெற்கில் எண்ணெய் டேங்கர் கப்பலான M/T Rumford பழுதானதால் கடல் போக்குவரத்து மந்தமானது என MarineTraffic மற்றும் TankerTrackers தெரிவித்துள்ளது.
M/T Rumford கப்பலின் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதாகவும் , அதன் உதவிக்கு இழுபறி படகுகளான டிம் ஹோப் மற்றும் மொசேட் 3 அனுப்பியதாகவும் சூயஸ் கால்வாய் தரப்பிலிருந்து நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கப்பல் வர்த்தக வட்டாரம் தெரிவித்துள்ளது.
M/T Rumford கப்பல் கோளாறனதாகவும், ஆனால் மீண்டும் வடக்கு வடக்கு நோக்கி செல்வதாக TankersTracker தெரிவித்தது.
இந்த பிரச்சினை சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது, அதற்குள் சரி செய்யப்பட்டது என சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது.
